மீண்டும் ஜெயலலிதா வேடத்தில் அந்த நடிகை.! அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2019 இல் தமிழ் திரைப்படமான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்தார்.
இதனை தொடர்ந்து, ரம்யா கிருஷ்ணன் வெப் சீரிஸில் நுழைந்து, மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தார். இதற்கு ‘குயின்’ என்று பெயரிடப்பட்ட இந்த தொடரை ரேஷ்மா கட்டாலா மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினர்.
இந்த தொடர் பிரபல OTT தளமான MX பிளேயரில் வெளியிடப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கதாபாத்திரத்தை மிகவும் பொருத்தமாக நடித்ததால் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
இதையும் படிங்களேன் – நீ அங்க சுத்தி., இங்க தான் வருவனு தெரியும்.! லோகேஷை கெஞ்ச வைத்த விஜய் சேதுபதி.!
தற்போது, அவரது வரவிருக்கும் அடுத்த தொடரான ’குயின் 2′ இன் ஒரு புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பிலிருந்து புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட நடிகை, மீண்டும் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
View this post on Instagram
இந்த தொடரில் ஜே.ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, அனிகா சுரேந்திரன், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் ஜெயலலிதாவாக வெவ்வேறு காலகட்டங்களில் நடித்தனர்.
‘குயின் 2’ படத்தின் பிரீமியர் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும், இந்த தொடரின் தொடர்ச்சி ரம்யா கிருஷ்ணனிடம் இருந்து தொடங்கும் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
