Connect with us

Videos

Miss You: கேக் வெட்டி சந்திரமுகியை வழி அனுப்பிவைத்த படக்குழு.!

இயக்குனர் பி வாசு கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸை நாயகனாக வைத்து, தனது திகில் நகைச்சுவை படமான சந்திரமுகி-யின் 2ம் பாகத்தை தொடங்கினார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும், இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் (சந்திரமுகி) கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Kangana Ranaut turns into Chandramukhi [Image Source: Twitter]

சந்திரமுகி 2-வில் முதல் பாகத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸுக்கு தயாராகி வரும் இப்படத்தில் லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, டி.எம்.கார்த்திக் மற்றும் சுரேஷ் மேனன் என பலர் நடித்துள்ளனர்.

Kanagana Ranaut Raghava Lawrence [Image Source: Twitter]

தற்போது, சந்திரமுகி 2-ல் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது பகுதிகளை முடித்துள்ளார். இந்நிலையில், படக்குழு அவரை இரண்டு கலர்புல் கேக்குகளை வெட்டி வழி அனுப்பி வைத்தன,  அந்த கேக்கில் ‘We  Miss You’ கங்கனா மேடம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்த வீடியோவில், இயக்குனர் பி வாசு கங்கனா ரணாவத் நடிப்பு பற்றி பாராட்டினார்

இதையும் படிங்களேன் – கவின் நடிக்கும் புதிய படம்.! இயக்குனர் யார் தெரியுமா.?

இதற்கிடையில், கங்கனா ரனாவத், சந்திரமுகி 2 படக்குழு மூலம் பெரிதும் ஈர்க்கப்பட்டதாக தெரிகிறது. தனது சமூகவலைத்தள பக்கத்தில், ராகவா லாரன்ஸுடன் இருக்கும் சில படங்களைப் பகிர்ந்து கொண்டு ஒரு பெரிய குறிப்பினை பகிர்ந்து கொண்டார், அந்த புகைப்படத்தில் இருவரும் ஸ்டைலிஷ் லுக்கில் தோற்றமளிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

Continue Reading
To Top