சீக்கிரம் படம் முடிங்கப்பா பள்ளிக்கூடத்துக்கு போகணும்..ஷூட்டிங் ஷபாட்டில் அடம் பிடித்த ஊர்வசி.!
எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து கொடுக்க கூடியவர் நடிகை ஊர்வசி என்றே கூறலாம். இவர் சமீபகாலமாக ஹீரோக்கள் அல்லது ஹீரோயின்களுக்கு அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது சில படங்களில் நடித்து முடித்துள்ளார்.

Kavitha Ranjini [Image Source : File Image ]
இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள உள்ளொழுக்கு எனும் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஊர்வசி முந்தானை முடிச்சி திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Urvashi [Image Source : File Image ]
இது தொடர்பாக பேசிய ” முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிக்கும் போது என்னுடைய வயது 13. அந்த சமயத்தில் நான் பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருந்தேன். பிறகு பள்ளிக்கூடத்துக்கு போவேன் பள்ளி முடிந்த பிறகு ஷூட்டிங்கிற்கு போவேன். ஒரு நாள் காலையில் நான் ஷூட்டிங்கிற்கு சென்றேன். அப்போது அங்கு இருப்பவர்கள் என்னிடம் எத்தனை மணிக்கு பள்ளிக்கூடம் போக வேண்டும் .. ? என்று என்னிடம் கேட்பார்கள்.

Munthanai Mudichu [Image Source : File Image ]
அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் 9 மணி 8 மணி என்று கூறுவேன் உடனடியாக சீக்ரம் ஷூட்டிங்கை முடிங்காப்பா ஊர்வசி பள்ளிக்கூடத்திற்கு போக வேண்டும் என்று என்னை கலாய்பார்கள். நானும் அடம் பிடிப்பேன் சீக்கிரம் என்னுடைய காட்சியை எடுக்க சொல்லி, நான் ஷூட்டிங்கையும் முடித்துக்கொண்டு அங்கேயே புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பேன். சினிமாவில் நான் ஒரு 50 படங்களுக்கு மேல் நடிக்கும் வரை இது ஒரு கேலியாகவே இருந்தது” என ஊர்வசி கூறியுள்ளார்.

Munthanai Mudichu [Image Source : File Image ]
மேலும் பேசிய ஊர்வசி ” நான் என்னை ஒரு நடிகையாக ஏத்துக்கிட்டதற்கு 100 படங்களுக்கு மேல் தேவைப்பட்டது. மற்றவர்கள் சீக்கிரம் ஏத்துக்கிட்டார்கள். ஆனால் நான் ஏற்றுக் கொள்ளவே இல்லை சம்பந்தமே இல்லாமல் என்னை போட்டு பாடம் எடுக்கிறார்கள் என்று தான் எனக்கு தோணும்” எனவும் கூறியுள்ளார். மேலும், முந்தானை முடிச்சி படத்திற்கு முன் ஊர்வசி பல படங்களில் நடித்திருந்தாலும் கூட அவருக்கு முந்தானை முடிச்சி தான் நல்ல ஒரு பெயரை பெற்று கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
