Connect with us

Movies

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம்.! எப்போது தெரியுமா..?

மணிரத்னம் இயக்கத்தில்  வெளியான பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30, 2022 அன்று வெளியானபோது மெகா ஹிட்டானது. இரண்டு பாகங்கள் கொண்ட இப்படம் அதே பெயரில் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டது. படத்தின் முதல் பாகம் வசூல் ரீதியாக 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

Ponniyin Selvan 2 5

Ponniyin Selvan [Image Source: Google]

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி பிரமாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், பொன்னியின் செல்வன் முதல் பாகம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Ponniyin Selvan Part 2

Ponniyin Selvan Part 2 [Image Source: Google]

அதன்படி, இரண்டாவது பாகம் வெளியாவதற்கு முன்பு முதல் பாகத்தை வெளியீட்டால் பொன்னியின் செல்வன் இரண்டாவது  பாகம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்பதற்காக வரும்  ஏப்ரல் 21-ஆம் தேதி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PS1

எனவே, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் ஏப்ரல் 21 -ஆம் தேதி திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கலாம். மீண்டும் ரீ-ரீலிஸ் செய்யப்படவுள்ளதால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Continue Reading
To Top