Connect with us

Movies

வில்லனை காப்பாற்றும் ஹீரோ…கலக்கும் ‘கஸ்டடி’…மிரட்டலான டிரைலர் இதோ.!!

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  படத்தில் கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணெலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளார்கள். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் கூட ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனை தொடர்ந்து இந்த படத்திற்கான டிரைலர் இன்று வெளியாகும் என முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தற்போது  தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில்  வெளியாகியுள்ளது.

 

டிரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் அருமையாக இருக்கிறது. கண்டிப்பாக படம் பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திரைப்படம் வரும் மே 11 -ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading
To Top