Gossips
போடு செம ஜோடி.! கவினின் அடுத்த படத்தில் நடிக்கும் அந்த கதாநாயகி…
கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. தற்போது, டாடா வெற்றியை ருசித்து வரும், கவினின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையில், அவரது வரவிருக்கும் படம் குறித்த தகவல்கள் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்தன.
பிரபல நடனக் கலைஞரான சதீஷ் தான் கவினின் அடுத்த படத்தை இயக்கவுள்ளாராம், சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசைமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சதீஷ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதனை அறிந்த இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது.
இதையும் படிங்களேன் – “நாக்க முக்க” பாடலுக்கு ஏன் ஆஸ்கர் விருது கிடைக்கல.! கொந்தளித்த நடிகர்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் பிரியங்கா மோகன், இதற்கு முன்னர் சிவகார்த்திகேயன், சூர்யாவுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர், இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ என்ற பிரம்மாண்ட படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்து வருகிறார்.
