Movies
பிரம்மாண்ட விமான நிலையம்..’லியோ’ படக்குழு செய்த தரமான சம்பவம்.!
வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

LEO VIJAY [Image Source: Twitter]
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்களில் அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னைக்கு வரவுள்ளார்கள். சென்னையில் வைத்து ஒரு 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதனையடுத்து சென்னையில் படப்பிடிப்பை முடித்த பிறகு லியோ படக்குழு எங்கு செல்லப்போகிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

leo vijay movie [Image Source: Google]
அதன் படி, சென்னையில் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஹைதராபாத்திற்கு லியோ படக்குழு செல்லவுள்ளது. அங்கு ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது. அங்கு தான் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதாம். பிரமாண்டமான விமான நிலைய செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- எல்லைமீறிய கிளாமர்…’ஹார்ட் பீட்டை ‘ எகிற வைக்கும் ராசி கண்ணா.! லேட்டஸ்ட் க்ளீஸ் இதோ.!

Leo NEW update [Image Source: Twitter]
