News
மதுபோதையில் கீர்த்தி சுரேஷை துன்புறுத்திய நபர்…’பளார்’ என அறைவிட்டு காவல்நிலையத்திற்கு சென்ற சம்பவம்…
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் தற்போது பிஸியாக இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக ஊடகங்கங்களுக்கு பேட்டி கொடுத்து படம் குறித்தும் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் ஒரு நபர் ஒருவர் தன் மீது சாய்ந்ததாகவும், இதனால் தான் கடுப்பாகி பளார் என அறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

KeerthySuresh [Image Source : Twitter /@KSUniverse_]
இது குறித்து பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் ” நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் ரோட்டில் எனது தோழியுடன் நடந்து கொண்டு போயிருந்தேன். அப்போது ஒரு நபர் குடுத்துவிட்டு என் பின்னாடியே வந்தார். பிறகு என் மீது லைட்டாக சாய்ந்தார் எனக்கு சற்று கோபம் வந்தது உடனடியாக அவரை பளார் என அறைந்ததேன். அறைந்துவிட்டு நான் என்னுடைய தோழியுடன் வந்துவிட்டேன்.

KeerthySuresh [Image Source : Twitter /@KeerthyanTanju]
அதன்பிறகு அந்த நபர் நான் சென்றுகொண்டிருந்தபோது, என்னுடைய பின்னாடி வேகமாக வந்து மண்டையில் பளார் என அடித்தார். ஒரு நிமிடம் எனக்கு ஒண்ணுமே தோணவில்லை, எனக்கு விபத்து நடந்து தலையில் அடிபட்டுவிட்டது என யோசித்தேன். ஆனால், பிறகு தான் நான் அடித்த நபர் என்னை தாக்கியது தெரிந்தது. அவர் என்னை தாக்கியுடன் என்னுடைய காதுகளில் 1 நிமிடம் சவுண்ட் நிக்கவே இல்லை. மிகவும் வலித்தது.

KeerthySuresh [Image Source : Twitter /@AshishKitty]
அடித்துவிட்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார் ஆனால் நானும் என் தோழியும் அவரை விடவில்லை அவரை துரத்தி சென்று பிடித்து அடித்து பக்கத்தில் ஒரு காவல் நிலையம் இருந்தது அந்த காவல் நிலையத்திற்கு சென்று அவரை ஒப்படைத்தோம்” என கூறியுள்ளார். இந்த தகவலை பார்த்த அவருடைய ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் உங்களுக்கு தைரியம் ரொம்ப அதிகம் தான் ” என கூறி வருகிறார்கள்.
