Movies
இரண்டு பாகங்களாக உருவாகும் ‘லியோ’ திரைப்படம்! சூடான சூப்பர் அப்டேட்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்திய சினிமாவே இந்த திரைப்படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

leo vijay filim [Image Source : File Image ]
படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, பிரியா ஆனந்த், மனோபாலா, ஜார்ஜ் மரியன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி, மிஷ்கின், அபிராமி வெங்கடாசலம், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட இன்னும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

leo vijay MOVIE [Image Source : File Image ]
இதனை முன்னிட்டு படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், படத்தை பற்றி சூடான சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அது என்னவென்றால், லியோ திரைப்படம் 1 பாகமாக வெளியாகவில்லையாம். கிட்டத்தட்ட ‘லியோ’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாம்.

leo vijay [Image Source : File Image ]
இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சற்று உற்சாகத்தில் உள்ளனர். உண்மையில் படம் ஒரு பாகமாக உருவாகிறதா அல்லது இரண்டு பாகமாக வெளியாகிறதா என்பது படம் வெளியான பிறகு தான் தெரிய வரும். மேலும் லியோ திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் சமீபத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
