Connect with us

News

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பொன்னியின் செல்வன் 2’ ட்ரெய்லர் வெளியானது.!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து, பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடி வசூலித்தது.

தற்போது, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ப்ரோமோஷன் பணிகள் ஏற்கனவே, தொடங்கிவிட்டது. அதன்படி, தற்போது சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

இந்த ட்ரைலர் முதல் பாகத்தை போலவே, மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பிரம்மாண்ட சண்டை காட்சிகளும், கார்த்தி மற்றும் திரிஷா இடம் பெரும் காதல் கட்சிகளும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. முதல்  பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

இந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார். மேலும், இந்த விழாவிற்கு, நடிகர் சிம்பு உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில், ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தனர்.

Continue Reading
To Top