போட்டிக்கு போட்டியாக களமிறங்கிய துணிவு அடுத்த மாஸ் அப்டேட்.! வா பதிலடிதான் தெரியுமடா உனக்கு….
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ திரைப்படம் தீவிரமாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது. எச் வினோத் இயக்கிய இந்த திரைப்படம் ஜனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஒரு திருட்டு த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார், மேலும் இந்த திரைப்படம் பஞ்சாபில் நடந்த வங்கி கொள்ளையின் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகிறது. ஏற்கனவே, படத்திலிருந்து சில்லா, சில்லா மற்றும் காசேதான் கடவுளடா என்ற இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
இந்நிலையில், இப்படத்தின் 3-வது பாடலான ‘கேங்ஸ்டா’ பாடலை ஷபீர் சுல்தான் பாடியுள்ளதாகவும் இந்த பாடல் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தில் அறிமுக பாடலான இந்த பாடலில் அஜித் செம ஸ்டைலாகவும், அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வரிகள் இருப்பதாகவும் டான்ஸ் மாஸ்டர் கல்யான் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதன்படி, தற்போது வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் அஜித் செம லுக்கில் உள்ளார்.
மேலும், படத்தின் பாடல் வரிகளுடன் அஜித்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வரிகளானது, வாரிசு படம் குறித்து தாக்கி பேசியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஏனென்றால், வாரிசு பாடல் வெளியான அடுத்தடுத்த நாட்களில் அடுத்தடுத்த பாடல்களை துணிவு படக்குழு வெளியிட்டு வருகிறது.
Make way for the #Gangstaa.????????#ThunivuThirdSingle releases on Dec 25th. Memorise the lyrics & be ready. #ThunivuPongal #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@zeestudios_ @bayviewprojoffl @kalaignartv_off #RomeoPictures @mynameisraahul @GhibranOfficial @MShenbagamoort3 pic.twitter.com/4djQa80smE
— Red Giant Movies (@RedGiantMovies_) December 22, 2022
அதன்படி, 24-ஆம் தேதி வாரிசு இசைவெளியிட்டு விழா என்பதால், இதனை தொடர்ந்து 25-ஆம் தேதி அதாவது அதற்கு அடுத்த நாளாக வெளியாக இருக்கும் “வா திலடிதான் தெரியுமடா உனக்கு” என்ற வரிகளுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
