News
காதலித்து ஏமாற்றிய நபர்…கதறி கண்ணீர் விட்டு அழுத நடிகை ஷெரின்…
நடிகை ஷெரினை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கனியாக வலம் வந்தவர் அவர்தான். இவர் சமீப காலமாக, பட வாய்ப்புகள் கிடைக்காததால் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 4 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு சில நாட்களில் அந்த நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறினார் .

Sherin Shringar [Image Source : Instagram/@sherinshringar]
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷெரின் தான் ஒருவரைவரை காதலித்ததாகவும், அவர் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் வேதனையுடன் பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய ஷெரின் ” 2019 -ஆம் ஆண்டு தான் என்னுடைய காதல் பிரேக் அப் ஆனது. நானும் ஒருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்தோம்.

Sherin [Image Source : Twitter /@endrum_ak_]
அவர் தான் என்னை விட்டு சென்றார். அந்த சமயம் என்னுடைய மனநிலை மிகவும் வேதனையாக இருந்தது. அந்த துயரத்திலிருந்து எப்படி வெளியே வரவேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு நாள் முழுவதும் கதவை பூட்டிக்கொண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதிருக்கிறேன். அந்த சமயம் தான் எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு வந்தது.

Sherin Shringar [Image Source : Twitter /@sherinshringar
]
விஜய் தொலைக்காட்சியில் இருந்து என்னிடம் பேசினார்கள். ஏற்கனவே நான் காதல் பிரேக் அப் ஆகி மனரீதியாக வருத்தத்தில் இருந்தேன். எனவே, அதில் இருந்து மீள வேண்டும் என்றால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாம் கலந்துகொண்டால் சரியாக இருக்கும் என யோசித்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அந்த நிகழ்ச்சியும் எனக்கு பிடித்திருந்தது.

Sherin Shringar [Image Source : Twitter /@sherinshringar
]
என்னுடைய சோகமான மனநிலையில் இருந்து வெளிவர கொஞ்சம் உதவியது. ஆனால், என்னுடைய வாழ்க்கையில் என்னை மிகவும் பாதித்தது என்னுடைய பிரேக் அப் தான்” என மனதில் வேதனையை வைத்துக்கொண்டு சோகத்துடன் ஷெரின் பேசியுள்ளார். இவருடைய பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஷெரினுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
