News
இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாகிறது பொன்னியின் செல்வன்- 2 படத்தின் ட்ரெய்லர்.!
இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில், படத்தில் இருந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஆகநக’ வெளியானது.
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை கமல்ஹாசன் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில், ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்தனர்.
