Connect with us

News

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK21’ பட அப்டேட் நாளை 11 மணிக்கு வெளியாகிறது.!

சிவகார்த்திகேயன் SK21 படத்தின் புதிய அபேட் ஒன்று நாளை காலை வெளியாகிறது.

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில், தன் ட்விட்டரில் இருந்து ஓய்வு எடுத்துள்ள சிவகார்த்திகேயன், படத்தின் படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கமல் தயாரிக்க படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளார். நேற்று இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது.

தற்போது, இந்த படத்தின் மேலும் ஒரு அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில், ப்ரீ புரொடக்‌ஷன் பணியின் இறுதிக்கட்ட பணிகளுக்காக தற்போது ஸ்ரீநகரில் முகாமிட்டுள்ள குழு, அதன் பிறகு படப்பிடிப்பை உடனடியாக தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top