Connect with us

Celebrities

தமிழில் பட வாய்ப்புகள் இல்லை…இசையமைப்பாளர் வித்யாசாகர் வேதனை.!

இசையமைப்பாளர் வித்யாசாகர் ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல ஹிட் பாடல்களையும், தரமான பின்னணி இசையையும் கொடுத்தவர். ஆனால், அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் ஆரம்ப காலகட்டத்தை போல பெரிதாக இல்லை என்றே கூறலாம். மீண்டும் பெரிய படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுப்பாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

Happy Birthday Vidyasagar

Happy Birthday Vidyasagar [Image Source: Twitter]

இந்த நிலையில், நேற்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்கள். இதனையடுத்து சமீபத்திய பேட்டி ஒன்றில் வித்தியாசகர் வருத்தத்துடன் பேசியுள்ளார்.

music director vidyasagar

music director vidyasagar [Image Source: Twitter]

இது குறித்து பேசிய வித்யாசாகர் ” நான் இசையமைப்பாளராக பல ஆண்டுகள் சினிமா துறையில் இருந்தும் கூட, தமிழகத்தில் ஒருமுறை கூட இசை நிகழ்ச்சி நடத்தவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே,  தமிழ் சினிமாவில் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

இதையும் படியுங்களேன்- அழகோ அழகு…நம்ம சமந்தாவா இது..? வைரலாகும் புகைப்படம்.!

Vidyasagar

Vidyasagar [Image Source: Twitter]

ஆனால், மலையாள சினிமாவில் மட்டுமே சில படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு வந்தது” என கூறியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் வித்யாசாகர் தற்போது “உயிர் தமிழுக்கு” என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top