News
விஜய்க்கும் எனக்கு நடுவுல பிரச்சனை…அவர் அரசியலுக்கு வரட்டும் ..’ஆனால்’….உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்…
நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கும் விஜய்க்கும் சிறிய மனக்கசப்பு இருந்ததாகவும், ஒரு நபரால் அந்த மாதிரி ஒரு பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனால் சில காலங்களால் அவருடன் பேச்சுவார்த்தை இல்லை எனவும் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மாமன்னன் படத்தின் ப்ரோமஷனுக்காக மற்றோரு பேட்டியில் சமீபத்தில் கலந்து கொண்ட உதயநிதி விஜய் பற்றி பேசியுள்ளார்.

udhayanidhi stalin and vijay [Image Source : File Image ]
இது தொடர்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின் ” கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்பி வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்திருந்தேன். அந்த மெசேஜ் பார்த்துவிட்டு நன்றி என கூறினார். பிரச்சனைக்கு பிறகு சமீபத்தில் என்னுடைய குடும்பத்தில் விழா ஒன்று நடந்தது. அந்த விழாவிற்கு விஜய் வருகை தந்திருந்தார்.

udhayanidhi stalin and vijay [Image Source : File Image ]
அந்த சமயம் அவருடன் ஒரு 10 நிமிடங்கள் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது சூப்பரா பண்றப்பா..வாழ்த்துக்கள் என என்னை பாராட்டினார். நான் நன்றி அண்ணா…நன்றி அண்ணா என கூறினேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுப்பாளர் கோபிநாத் அவரிடம் விஜய் அரசியல் வருகை பற்றி கேள்வி கேட்க அதற்கும் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார்.

udhayanidhi stalin and vijay [Image Source : File Image ]
இது தொடர்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின் ” விஜய் அரசியலுக்கு வரட்டும். ஆனால், அவர் அரசியலுக்கு வந்தால் அவருடைய கட்சி கொள்கைகள் என்ன என்பதை சொல்ல வேண்டும். என்னுடைய கட்சியில் கொள்கைகள் இருக்கிறது. எங்களுடைய இயக்கத்தில் பல கொள்கைகள் இருக்கிறது. அதே போல அவருடைய கொள்கைகள் என்னவென்று என்பதை சொல்லவேண்டும். அது ஒத்து போனால் அவருடன் சேர்ந்து பயணிக்கலாம்.

udhayanidhi stalin and vijay [Image Source : File Image ]
இதையும் படியுங்களேன்- அசிங்க அசிங்கமா திட்டிய ஆட்டோக்காரர்…சிரித்துக்கொண்டே உண்மையை கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..
விஜய் சமீபத்தில் குழந்தைகளை பாராட்டி அதாவது, அதிக மதிப்பெண்கள் எடுத்த குழந்தைகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். அந்த முயற்சி புதிதாக இருந்தது. இதைப்போல பல உதவிகளை அவர் தொடர்ந்து பண்ண வேண்டும்” என கூறியுள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
