Connect with us

News

அந்த மாதிரி காட்சிகள் இருக்கவே கூடாது…இயக்குனருக்கு உத்தரவு போட்ட அஜித்.?

நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 62-வது திரைப்படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார். நேற்று கூட மிகவும் ஸ்டைலான லுக்கில் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்த லுக் தன்னுடைய 62-வது படத்திற்காக தான் அஜித் வைத்துள்ளார் என்று பலரும் கூறினார்கள்.

AjithKumar new

AjithKumar new [Image Source: Twitter]

மேலும், அஜித்தின் 62-வது திரைப்படத்தை பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால். இன்னும் படத்தை யார் இயக்க போகிறார் என்ற குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் கிட்டத்தட்ட அஜித்தின் 62-வது திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதி என்றே சொல்கிறார்கள்.

இதையும் படியுங்களேன்- ஹோட்டலில் மீட் பண்ணலாம்…அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய வரலட்சுமி.!

Ajith Kumar's AK 62 Magizh Thirumeni

Ajith Kumar’s AK 62 Magizh Thirumeni [Image Source: Twitter]

இந்த நிலையில், மகிழ் திருமேனி அஜித்தை வைத்து இயக்கும் இந்த திரைப்படம் போதை பொருள் மாபியா கும்பலை பற்றியது என்று கூறப்படுகிறது. எனவே, அஜித் மகிழ் திருமேனிக்கு கட்டளை போட்டுள்ளாராம். அது என்னவென்றால், இந்த படத்தில் யாரையும் புண்படுத்தும் காட்சிகள் இருக்க கூடாது என்று கூறியுள்ளாராம்.

ajith magil thirumeni ak62

ajith magil thirumeni ak62 [Image Source: Twitter]

எனவே, அஜித் போட்ட கட்டளை காரணமாக அதற்கு ஏற்றது போல, கதையில் சில மாற்றங்களை மகிழ் திருமேனி செய்து வருகிறாராம். அதைப்போல படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்றும் படக்குழு யோசித்து வருகிறாராம். விரைவில் AK62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top