News
எனக்கு பிடிச்ச கெட்டவார்த்தை இதுதான்…பாதி ஓகே.. மீதி எங்கே.? ஓப்பனாக பேசிய வாணி போஜன்..
சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் இப்போதெல்லாம் தங்களிடம் எந்த மாதிரி கேள்விகள் கேட்டாலும் அதற்கு வெளிப்படையாகவே பதில் அளித்து விடுகிறார்கள். கெட்டவார்த்தை பற்றிய கேள்வியோ அல்லது அட்ஜெஸ்ட்மென்ட் குறித்த கேள்வியோ..அல்லது அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பது குறித்தோ என எந்த மாதிரி கேள்விகள் கேட்டாலும் மிகவும் ஓப்பனாக பதில் அளித்து விடுகிறார்கள்.

Vani Bhojan [Image Source : Instagram/@vanibhojan]
அந்த வகையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வாணி போஜனிடம் நீங்கள் அதிகமாக உபயோகம் செய்யும் கெட்ட வார்த்தை எது என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார். அந்த கேள்விக்கும், எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாகவே தான் உபயோகம் செய்யும் அந்த கெட்ட வார்த்தையின் பெயரை வாணி போஜன் கூறியுள்ளார்.

Vani Bhojan [Image Source : Instagram/@vanibhojan]
இது குறித்து அந்த பேட்டியில் பேசிய வாணிபோஜன் ” நான் அதிகமாக கெட்ட வார்த்தை உபயோகம் செய்ய மாட்டேன் கோபம் வந்தால் மட்டும் தான் அடிக்கடி உபயோகம் செய்வேன் . அப்படி அதிகமாக உபயோகம் செய்வது FU என கூறியுள்ளார். கூறியது மட்டுமில்லாமல் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அதற்கான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Vani Bhojan [Image Source : Instagram/@vanibhojan]
இதையும் படியுங்களேன்- மேடம் நீங்க ரொம்ப….மேடையில் கீர்த்தி சுரேஷிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘லவ் டுடே’ பிரதீப்…
இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் பாதி ஓகே.. மீதி எங்கே.? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், நடிகை வாணிபோஜன் கடைசியாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக பாயும் ஒளி நீ எனக்கு எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
