Videos
அட இது நம்ம மகேஷ் பாபுவின் மகளா? பாரம்பரிய உடையில் கலக்கும் கியூட் வீடியோ…
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சிதாரா கட்டமனேனி தற்போது பதினொறு வயதாகி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார், அது உடனடியாக இணையத்தில் வைரலாகி விடுகிறது.
சிதாராவின் சமீபத்திய வீடியோவில், அவர் தேவதை போல்… தங்க நிற பாவாடை மற்றும் ரவிக்கை பச்சை நிறம் கொண்ட Half சேலை அணிந்திருக்கிறார். உகாதி பண்டிகை முன்னிட்டு சிதாரா வெளியிட்டுள்ள சமீபத்திய வீடியோவில், அவர் தேவதை அவதாரத்தில் தங்க நிற பாவாடை மற்றும் ரவிக்கை பச்சை நிறம் கொண்ட Half சேலை அணிந்திருக்கிறார்.
View this post on Instagram
மேலும் அந்த பதிவில், “நம்மைச் சுற்றி அன்பையும், கருணையையும், நேர்மறையையும் பரப்புவதன் மூலம் இந்த உகாதியை மறக்கமுடியாத ஒன்றாக மாற்றுவோம். அனைவருக்கும் உகாதி & குடி பத்வா வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்களேன் – ஜவான் படத்தில் சொதப்பிய அனிருத்…செம கடுப்பில் இயக்குனர் அட்லீ.!
மகேஷ் பாபு 2005 ஆம் ஆண்டு தனது சக நடிகையான நம்ரதா ஷிரோத்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2006 ஆம் ஆண்டு கௌதம் என்ற மகன் பிறந்தார். பின்னர், சிதாரா கட்டமனேனி ஆண்டுகளுக்குப் பிறகு 2012-ல் பிறந்தார். மேலும், சிதாரா, மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சர்க்காரு வாரிய பாட’ படத்தில் இடம்பெற்றுள்ள பென்னி பாடலில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
