Celebrities
இதான் நாட்டோட நிலைமை.! எனக்கு பயமே கிடையாது.! மகான் இயக்குனரின் சுளீர் பேச்சு.!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் காந்தியை கொன்ற கோட்சேவை தீவிரவாதி என்று சொல்லியது இப்போது வைரலாகி வருகிறது.
கடந்த வாரம் அமேசான் பிரைம் வீடியோவில் விக்ரம் மற்றும் அவரது மகன் நடிப்பில் வெளியான திரைப்படம் “மகான்” . காந்தியைப் பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் மக்கள் காந்திய வாழ்க்கை முறையை எப்படி வன்முறையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்தப் படம் எடுத்துக்காட்டுகிறது.
அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில், மகான் படத்தில் ஒரு டயலாக் இருந்தது. ‘உன்னைப் போன்ற சித்தாந்த ரீதியாக தூண்டப்பட்ட வன்முறை தீவிரவாதிதான் காந்தியை சுட்டுக் கொன்றான்.’ ஆனால், அதை நான் இப்போ மாற்றியுள்ளேன். ஏன்னென்றால் காந்தியைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் கோட்சேவைப் பற்றி எதுவும் சொல்லாதீர்கள், அது பிரச்சினைகளை உருவாக்கும் என்று என்னிடம் ஒரு தரப்பு சொன்னார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
????????????
— Christopher Kanagaraj (@Chrissuccess) February 18, 2022
“நாம் வாழும் காலத்தில், காந்தி இறந்தார் என்று சொல்ல அனுமதிக்கப்படுகிறதாம். ஆனால், கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றார் என்று சொன்னால் நம் நாட்டில் பலருக்கு கோபம் வரும். அதனால் தான் நான் அந்த வரியை மாற்றினேன்.
மேலும் அவர் கூறுகையில், ‘காந்தியையும் காந்தியத்தையும் அழித்தது உங்களைப் போன்றவர்கள்தான்” இதைவிட தெளிவாக என்னால் கூற முடியாது, “கோட்சே ஒரு தீவிரவாதி, நம் தேசத்தின் தந்தையை கொன்றவன்”. ஆனால், அந்த உண்மையைச் சொன்னால் பிரச்சனை வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. மேலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலை என்னை வருத்தமடையச் செய்கிறது என்றார்.
