அந்த மாதிரி பாடல்களில் ஆடியதற்கு இது தான் காரணம்…மனம் திறந்த நடிகை நயன்தாரா.!
நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் எனும் த்ரில்லர் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நயன்தாராவுடன் சிறப்பு நேர்காணல் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி டிடி தான் தொகுத்து வழங்கினார்.

Nayanthara Interview [Image Source: Google]
இந்த நிகழ்ச்சியில் டிடி நயன்தாராவிடம் பல கேள்விகள் கேட்டார். அதற்கு நடிகை நயன்தாராவும் மறுக்காமல் பதில் அளித்து வந்தார். அப்போது டிடி எதற்காக படங்களில் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் சிவகாசி, சிவாஜி போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடினீர்கள் என்ற கேள்வியை கேட்டார்.
இதையும் படியுங்களேன்- உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய அனுஷ்கா…! விரைவில் தரமான ரீ- என்ட்ரி…?

Nayanthara Dance [Image Source: Google]
அதற்கு பதில் அளித்த நயன்தார ” நான் ஸ்பெஷலாக படங்களின் ஒரு பாடலில் மட்டும் நடமாடியதால் பலரும் அட்வைஸ் கூறினார்கள். எதற்காக இப்படி ஒரு பாடலில் மட்டும் நடனமாடுகிறாய்.. பிறகு வாய்ப்பு அந்த மாதிரியே வந்துவிடும் என கூறினார்கள். நான் அவர்கள் சொன்னதை பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை.

Nayanthara New [Image Source: Twitter]
ஏனென்றால், நான் அந்த மாதிரி ஸ்பெஷல் பாடல்களில் ஆடுவது மிகவும் ஸ்பெஷலான விஷயம், எனவே என்னிடம் எதோ ஒன்று ஸ்பெஷலாக இருப்பதால் தான் என்னை அழைக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். மேலும் நடிகை நயன்தாரா கனெக்ட் திரைப்படத்தை தொடர்ந்து ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
