Television
மணிமேகலை எடுத்த முடிவுக்கு காரணம் இதுதான்…உண்மையை உடைத்த செஃப் தாமு.!
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால் எந்த காரணத்துக்காக அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்று எந்த ஒரு தகவலையும் கூறவில்லை.

Manimegalai [Image Source: Twitter]
இந்த நிலையில் மணிமேகலை எடுத்த இந்த அதிரடியான முடிவு எடுத்த காரணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் செஃப் தாமு பேசியுள்ளார். இது குறித்து பேசிய செஃப் தாமு “மணிமேகலை நிகழ்ச்சியில் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அவருடைய காமெடிகளை மிஸ் செய்கிறோம்.

chef K. Damodaran [Image Source: Twitter]
மணிமேகலை எனக்கு மகள் போன்றவர். அவருடைய விருப்பம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தான். எனவே, அதில் கவனம் செலுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.அவரது எதிர்காலம் ரொம்ப முக்கியம். அதனால் எடுத்த முடிவு தான் இது” என தாமு கூறி இருக்கிறார்.

Manimegalai cwc [Image Source: Twitter]
மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக மணிமேகலை 60,ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளாராம், அதன் அடிப்படையில் அவர் 10 எப்பிசோடுகள் வந்துள்ளார் மொத்தமாக அவர் 6 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
