News
திருமணத்திற்குப் பிறகும் திருந்தல…சோனியா அகர்வால் விவாகாரத்துக்கு இது தான் காரணமா..?
நடிகை சோனியா அகர்வால் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து ஆனது அனைவருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் காதலித்து 2006 டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள் பிறகு இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

Sonia Agarwal [Image Source : Instagram/@soniaaggarwal1]
இருவருக்கும் எதற்காக விவாகரத்து ஆனது என்பது குறித்து இருவருமே எந்த ஒரு பேட்டிகளிலும் கூறவில்லை. இந்த நிலையில், விவாகரத்துகாண காரணம் குறித்து பரபரப்பான தகவல் ஒன்றை நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” முன்னணி நடிகையாக திகழவேண்டிய சோனியா அகர்வால் செல்வராகவனை காதலித்தார்.

Sonia Agarwal [Image Source : Instagram/@soniaaggarwal1]
செல்வராகவனும் , சோனியா அகர்வாலும் காதலித்துக் கொண்டிருந்த சமயத்தில் சோனியா அகர்வால் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும் என்பது செல்வராகவனுக்கு தெரியும. பிறகு கல்யாணத்துக்கு அப்புறம் சோனியா அகர்வால் திருந்துவார் என செல்வராகவன் எதிர்பார்த்தார். ஆனால், சோனியா அகர்வால் திருந்தவே இல்லை. செல்வராகவனும் பலமுறை இந்த கெட்ட பழக்கத்தை நிறுத்த கூறியுள்ளாராம்.

Sonia Agarwal [Image Source : Instagram/@
soniaaggarwal1]
செல்வராகவனின் தந்தை கஸ்தூரிராஜாவும் சோனியா அகர்வாலை கண்டித்தார். பிறகு ஒருநாள் செல்வராகவனும் சோனியா அகர்வாலிடம் நேரடியாகவே கேட்டுள்ளாராம். இந்த கேட்டபழக்கத்தை நிறுத்துவியா..? மாட்டியா..? என்று கேட்டுள்ளார். அதற்கு சோனியா அகர்வால் நிறுத்தமாட்டேன் என்ன செய்ய முடியும் ..? என கேட்டுள்ளாராம். பிறகு இதனால் வாக்கு வாதம் ஏற்பட கருத்து வேறுபாடுகாரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள்” என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
