Connect with us

Movies

இந்திய அளவில் டாப் 10 லிஸ்ட்… பிரமாண்ட சாதனையில் இடம் பிடித்த 2 தமிழ்ப்படங்கள்.?

இந்திய அளவில் டாப் 10 லிஸ்ட்… பிரமாண்ட சாதனையில் இடம் பிடித்த 2 தமிழ்ப்படங்கள்.?

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு (2022) பல வெற்றி படங்கள் வந்தது என்றே கூறலாம். சில திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வெற்றிபெற்றாலும், பல படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. குறிப்பாக பொன்னியின் செல்வன், விக்ரம், கேஜிஎப் 2 போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை சந்தித்துள்ளது.

இதையும் படியுங்களேன்- அந்த விஷயத்தில் ஷங்கரை ஓரம் கட்டிய தளபதி தம்பி அட்லீ.!?

இதனையடுத்து,  டிக்கெட் இணையதளம் மற்றும் ஸ்ட்ரீமிங் தளமான புக்மைஷோ இந்த ஆண்டு (2022)  வெளியான படங்களில் எந்தெந்த படங்களை மக்கள் பார்க்க அதிக டிக்கெட்கள் பதிவு செய்துள்ளார்கள் என்பதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் படங்களில் பொன்னியின் செல்வன் , விக்ரம் ஆகிய படங்கள் இடம் பிடித்துள்ளது.

1.கேஜிஎப் -2 

KGF 2

KGF 2 [Image Source: Twitter]

நடிகர் யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் கேஜிஎப் 2. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 1,000 கோடி வரை வசூல் செய்தது. இந்த திரைப்படம் தான் இந்த ஆண்டு புக்மைஷோ பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

2.ஆர்.ஆர்.ஆர் 

RRR Movie

RRR Movie [Image Source: Twitter]

நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில்வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 1,800 கோடிகள் வசூல் செய்திருந்தது. இந்த படம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

3.காந்தாரா

Kantara is a NEW Record

Kantara is a NEW Record [Image source: Google]

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “காந்தாரா”.  இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.  இந்த படம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

4.காஷ்மீர் பைல்ஸ் 

The Kashmir Files

The Kashmir Files [Image Source: Twitter]

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. இந்த படம் விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்தது. இந்த படம் நான்காவது இடத்தில் உள்ளது.

5.பொன்னியின் செல்வன் 

Ponniyin Selvan Poster

Ponniyin Selvan Poster [Image Sourcecinebloopers: ]

தமிழ் சினிமாவே வசூலில் தலை நிமிர வைத்த திரைப்படம் என்றால் பொன்னியின் செல்வன் படம் தான் என்று கூறலாம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்களின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 530 கோடிகள் வசூல் செய்து இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த படம் ஐந்தாவது  இடத்தில் உள்ளது.

6.பிரம்மாஸ்திரம்

Brahmastra

Brahmastra [Image Source: Twitter]

இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பிர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா நடிப்பில் வெளியான பிரமாண்ட திரைப்படம் பிரம்மாஸ்திரம். இந்த திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படம் ஆறாவது  இடத்தில் உள்ளது.

7.விக்ரம்

Vikram Movie Poster

Vikram Movie Poster [ Image Source : Google ]

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 400 கோடிகளுக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படம் ஏழாவது இடத்தில் உள்ளது.

8.த்ரிஷ்யம் 2

Drishyam 2

Drishyam 2 [Image Source: Google]

இயக்குனர் அபிஷேக் பதக் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகை ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்த ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட்டானது. இந்த படம் எட்டாவது இடத்தில உள்ளது/

9.பூல் புலையா 2

Bhool Bhulaiyaa 2

Bhool Bhulaiyaa 2 [Image Source: Google]

இயக்குனர் அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “பூல் புலையா 2”. இந்த படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கூட  வசூல் ரீதியாக வெற்றியடைந்து பல சாதனைகளை படைத்தது.  இந்த படம் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

10.டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்

Doctor Strange in the Multiverse of Madness

Doctor Strange in the Multiverse of Madness [Image Source: Twitter]

இயக்குனர் இயக்குனர் இசுகாட் டெரிக்சன் என்பவர் இயக்கத்தில் வெளியான ஆங்கில திரைப்படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். இந்த திரைப்படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் புக்மைஷோ-வில் 10 -வது இடத்தை பிடித்துள்ளது.

Ponniyin Selvan Vs Vikram

Ponniyin Selvan Vs Vikram [Image Source: Google]

இந்த பட்டியலில் விக்ரம், மற்றும் ஆகிய இரண்டு தமிழ் படங்கள் இடம்பிடித்துள்ளதால், சினிமா ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இதைப்போல தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வரவேண்டும் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Continue Reading
To Top