Movies
ஐஸ்வர்யா ராஜேஷின் “சொப்பன சுந்தரி” டிரைலர் எப்படி இருக்கு?
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனது தைரியமான ஸ்கிரிப்ட் தேர்வுக்காவும், வலுவான நடிப்புக்காகவும் பாராடுட்களை பெற்று வருகிறார். தற்போது, அவர் எஸ்.ஜி சார்லஸ் இயக்கிய “சொப்பன சுந்தரி” என்ற வேடிக்கை நிறைந்த படத்தில் நடித்திருக்கிறார் இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை இணையத்தில் வெளியானது.
டிரெய்லரை வைத்து பார்க்கும்பொழுது, நகைச்சுவை நடிகர்கள் பலர் நிறைந்து இருப்பதால், நகைச்சுவையையும் அந்த அளவிற்கு நிறைந்துள்ளது. ஒரு அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியில் கிடைக்கும் பரிசு காரை வைத்து கதை நகர்கிறது. அந்த கார் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிடைக்காமல் வேறுஒருவருக்கு கிடைப்பதால்,அந்த காரை எப்படி பெறுகிறார் என்பது தான் மீதிக்கதை. பின்னணியில் அஜ்மல் தஹ்சீன் இசையமைத்த ஸ்டைலிஷ் பாடலுடன் டிரெய்லர் சூப்பர் கூலாக இருக்கிறது.
அந்த வகையில், படத்தின் தலைப்பு கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடி கிளாசிக் படமான, ‘கரகாட்டக்காரன்’ படுத்தில் இடம்பெறும் காமெடி டயலாக் ஆகும். தலைப்பு குறிப்பிடுவது போல, சொப்ப சுந்தரியின் கதை ஒரு சிகப்பு காரை பற்றியும் இப்படத்தில் காமிக்கபட்டுள்ளது.
இதையும் படிங்களேன் – ஆஸ்கர் விருதுகள் வழங்கும் பட்டியலில் தீபிகா படுகோன்.!
ஹம்சினி என்டர்டெயின்மென்ட் & ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இந்த படத்தில், தீபா சங்கர், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, கருணாகரன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
