பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் உலக நாயகன் கமல்ஹாசன்.!
கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். 4 வருட இடைவெளிக்குப் பிறகு, கமல்ஹாசன் இந்த ஆண்டு தனது விக்ரம் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பல்வேறு இயக்குனர்களுடன் சில படங்களில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது. கமல் தனது முழு நேரத்தையும் தனது நடிப்பு வாழ்க்கைக்காக அர்ப்பணிக்க விரும்புவதாகவும், மேலும் அவர் கையெழுத்திட்ட திரைப்படங்களில் நடிக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே நடைபெறவுள்ள பிக் பாஸ் சீசன் 6 இறுதிப்போட்டியுடன், இந்த நிகழ்ச்சியிலிருந்து விடைபெற கமல்ஹாசன் விரும்புவதாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
இதையும் படிங்களேன் – பாலிவுட் வெப் சீரிஸிலிருந்து விலகிய சமந்தா? பரபரப்பை ஏற்படுத்திய அந்த பதிவு…
இந்தியன் 2 படத்திற்குப் பிறகு, இயக்குனர் மகேஷ் நாராயணனுடன் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், கமல் தனது வரவிருக்கும் படங்களுக்காக பா ரஞ்சித் மற்றும் எச் வினோத் ஆகியோருடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
