News
“வாரணம் ஆயிரம், துப்பாக்கி, போடா போடி” திரைப்பட கிடார் இசைக் கலைஞர் காலமானார்.!
Published on
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கிடார் வாசித்த பிரபல இசைக் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் இன்று காலமானார் என்று கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், உடல் நலக்குறைவால் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரணம் ஆயிரம் படத்தில் நெஞ்சுக்குள் பெய்திடும், போடா போடி படத்திலிருந்து போடா பொடி, மற்றும் பீமா படத்தில் ஒரு முகமோ ஆகியவை அவர் இசைத்த சில பிரபலமான பாடல்களில் அடங்கும்.
இதையும் படிங்களேன் – லியோ காஷ்மீர் செட்யூல் நிறைவு.! ஸ்பெஷல் வீடியோ ரெடி…
இதனை தொடர்ந்து, உப்பு கருவாடு என்ற தமிழ் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இது போக, ஸ்டீவ் வாட்ஸ் இளையராஜா, சிவமணி மற்றும் கிராமி விருது பெற்ற கலைஞர் ஸ்காட் அண்டரவுட் ஆகியோருடனும் பணியாற்றியுள்ளார்.
