Connect with us
maamannan movie

News

மாமன்னன் படப்பிடிப்பில் செம கடுப்பாகி வடிவேலு, உதயநிதியிடம் சண்டைக்குப்போன மாரிசெல்வராஜ்.!!

மாமன்னன் படப்பிடிப்பில் செம கடுப்பாகி வடிவேலு, உதயநிதியிடம் சண்டைக்குப்போன மாரிசெல்வராஜ்.!!

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் 1 வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Maamannan

Maamannan [Image Source : Twitter / @Udhaystalin]

இதற்கிடையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக வடிவேலுவும், உதயநிதி ஸ்டாலினும் பேட்டிஒன்றில் கலந்துகொண்டு மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் மாரிசெல்வராஜ் கோபப்பட்டதை பற்றி பேசியுள்ளார்கள். மாமன்னன் திரைப்படம் முற்றிலும் ஒரு சீரியசன படமாக எடுக்கப்பட்டுள்ளதாம். எனவே, படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு உதயநிதியை தவிர அனைவரும் சிரிக்காமல் சீரியஸாக தான் இருப்பார்களாம்.

vadivelu and udhayanidhi stalin

vadivelu and udhayanidhi stalin [Image Source : File Image ]

ஆனால், வடிவேலுவும், உதயநிதியும் நடித்துமுடித்துவிட்டு சிரித்துக்கொண்டு மிகவும் ஜாலியாக பேசி கொண்டிருப்பார்களாம். இதனால் செம கடுப்பான இயக்குனர் மாரிசெல்வராஜ் இவர்கள் இருவரிடம் வந்து என்ன நீங்க 2 பெரும் இப்படி சிரித்துக்கொண்டு ஜாலியாக இருக்கீங்க..? கொஞ்சமாவது சீரியஸாக இருங்க என்று கூறுவாராம்.  அதற்கு உதயநிதி என்ன சார் படம் தான் சீரியஸ் படம் நாங்கள் எதற்கு  சீரியஸாஇருக்கவேண்டும்..? என்று கேட்பாராம்.

mari selvaraj

mari selvaraj [Image Source : File Image ]

பிறகு வடிவேலுவும் நாங்கள் ஜாலியாக இருந்தாலும் கூட, நடிக்கும்போது சீரியஸாக மாறிவிடுவோம் என்பாராம். அதற்கு மாரிசெல்வராஜ் நீங்க மாறீடுவிங்க நான் மாற ரொம்ப வருடம் ஆகும்” என கூறுவாரும்.  இதுவரை நான் 2 படங்களை இயக்கியுள்ளேன். அதனுடைய மேக்கிங் வீடியோவை கூட போட்டு காமிக்கிறேன். என்னுடைய ஹீரோக்கள் சக கலைஞர்கள் யாராவது படப்பிடிப்பில் இப்படி சிரிக்கிறாங்களா என்று பாருங்கள் என செம கோபத்தில் பேசினாராம்.

vadivelu and udhayanidhi stalin and mari selvaraj

vadivelu and udhayanidhi stalin and mari selvaraj [Image Source : File Image ]

அதுமட்டுமில்லாமல் அங்கு இருக்கும் தன்னுடைய உதவி இயக்குநர்களிடமும், சக கலைஞர்களிடமும் வடிவேலு, உதயநிதி ஆகிய இருவர் கூடவும் பேசவே கூடாது. எல்லாரும் கேட்டு போய் கிடக்கிங்க” என  வடிவேலு, உதயநிதியிடம் சண்டைக்குப்போவாராம். இந்த தகவலை தான் அவர்கள் இருவரும் பேட்டியில் தெரிவித்துள்ளார்கள். இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் ரசிகர்கள் மாரி செல்வராஜ் ரொம்ப கோபக்காரர் போல என கூறி வருகிறார்கள்.

Continue Reading
To Top