நடிகை வாணி போஜன் தனது சமூக வலைத்தளங்களில் ஏதேனும் புகைப்படங்களை வெளியீட்டாலோ அல்லது வீடியோக்களை வெளியீட்டாலோ ஒரு சிலர் அந்த பதிவுகளுக்கு கீழ் ஆபாசமாக கமெண்ட் செய்வது உண்டு. ஆனால், அதைப்பற்றி எல்லாம் வாணிபோஜன் பெரிதாக கவலை பட்டதே இல்லை என்று கூட கூறலாம். அதற்கும் சில நேரங்களில் வாணிபோஜன் பதில் கூட அளித்தது இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில், கலந்து கொண்ட வாணி போஜனிடம் அவருடைய போஸ்டின் கீழ் வந்த தவறான கமெண்ட்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அப்போது வாணி போஜன் கிளாமராக வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் காட்டறதுனு முடிவு பண்ணிட்டீங்க முழுசா காட்டினா என்ன..? என்பது போல தவறான அர்த்தத்தில் கமென்ட் செய்திருந்தார்.
அந்த கமெண்ட்டை வாணி போஜனிடம் காட்டி இதற்கு உங்கள் பதில் என்ன என்ன தொகுப்பாளர் கேட்க, அதற்கு வாணி போஜன் “காமிக்கும்போது பார்த்துட்டு போங்க அதை விட்டுட்டு காமிக்காத போது எதற்கு என்னை தொந்தரவு பண்றீங்க..?. பொதுவாக இதுக்கு மட்டுமே தனி குரூப் இருக்கும். சத்தியமா இந்த மாதிரி கேக்கும் கும்பல்களை திருந்தவே முடியாது. இதற்காக என்றே தனி கும்பல் இருக்கும்.
அவர்கள் நம் என்ன செய்தாலும் அதனை தவறான கண்ணோட்டத்தில் மட்டும் தான் பார்ப்பார்கள். அவர்களுக்கு வேறு ஏதும் வேலையே கிடையாது. நாம் நார்மலான ஒரு புகைப்படங்களை வெளியிட்டால் கூட அதுவே தப்புதான் என்பார்கள். அந்த கூட்டத்தை மட்டும் திருத்தவே முடியாது” என கூறியுள்ளார்.
மேலும் நடிகை வாணி போஜன் தற்போது விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக பாயும் புலி நீ எனக்கு எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த புகைப்படத்தை கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்கியுள்ளார். படம் வரும் ஜூன் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.