News
பிரபல நடிகையுடன் நெருக்கமாக போஸ் கொடுத்த வனிதா..! வைரலாகும் புகைப்படங்கள்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான நடிகை வனிதா தற்போது சில புதிய படங்களில் நடிக்க கமிட் ஆகியும் சில படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில், இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வந்தார்.

Vanitha Vijaykumar [Image Source: Twitter]
குறிப்பாக திருமண கோலத்தில் அவர் பவர்ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி சற்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
புகைப்படத்தில் நடிகை வனிதா பவர்ஸ்டார் கன்னத்தை கிள்ளி கொண்டு வாயை முத்தம் கொடுப்பது போல வைத்துள்ளார். மற்றோரு புகைப்படத்தில் இருவரும் மாஸாக போஸ் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

vanitha vijayakumar [Image Source: Twitter]
மேலும், தற்போது வனிதா தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
