அடேங்கப்பா…! ‘வாரிசு’ ஆடியோ லான்ச் டிக்கெட் விலையை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்….
இயக்குனர் வம்ஷி இயக்கத்தில், தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க, மேலும் சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, மற்றும் சங்கீதா கிரிஷ் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வாரிசு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும், இது பாக்ஸ் ஆபிஸில் அஜீத் குமாரின் துணிவு படத்துடன் மோதுகிறது. 9 வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒன்றாக களமிறங்க இருப்பதால், இரண்டு படத்திற்கும் பிரமாண்ட எதிர்பார்ப்பு உள்ளது.
அந்த வகையில், படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வாரிசு குறித்து அப்டேட்கள் குவிந்த வண்ணமே உள்ளது. ஏற்கனவே, வாரிசு படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களே குஷிப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்களேன் – சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து இந்த ஆண்டு மறைந்த நட்சத்திரங்கள்….
இந்நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு மேல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது நாளை நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், ரசிகர்கள் சமூக வலைத்தளங்கில் புகார் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி, ஒரு டிக்கெட்டின் விலை ரூ.5000 முதல் ரூ.6000 வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் கதறி வருகிறார்கள்.
ஆனால், ஒரு பக்கம் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள், சென்னை ஈசிஆரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் விநியோகிக்கப்படுவதாகவும், மேலும் அந்த டிக்கெட்டுகள் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
