Connect with us

News

வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ டிரெய்லர் எப்போது.? தேதியை குறித்த படக்குழு…

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் கிருத்தி ஷெட்டி நடித்துள்ள ‘கஸ்டடி’ திரைப்படம் மே 12 அன்று திரைக்கு வர உள்ளது. இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை மே 5ம் தேதி வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

CustodyTrailer

CustodyTrailer [Image Source : Twitter]

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ளார். இப்படத்தில் ப்ரியாமணி, அரவிந்த் சாமி, ராம்கி, சம்பத் ராஜ், சரத்குமார், பிரேம்கி, வெண்ணெலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Custody Teaser 2

Custody Teaser 2

மார்ச் மாதத்தின் தொடக்கத்தில், வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசரில் நாக சைதன்யா ஒரு தீவிரமான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் காட்சி அனைவரையும் ஈர்த்தது. இப்படத்தில் நாக சைதன்யாவின் காதலியாக கிருத்தி ஷெட்டி நடித்துள்ள நிலையில், அரவிந்த் சாமி வில்லனாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைக்கவுள்ளனர்.

Continue Reading
To Top