News
வாடிவாசல் படத்தில் நான் தான் நடிக்கணும்னு வெற்றிமாறன் உறுதியா இருக்காரு…சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமீர்…
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் விரைவில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த வாடிவாசல் படத்திற்காக ஒட்டுமொத்த தமிழ் சினிமா திரையுலகமே எதிர்பார்ப்புடனும், ஆர்வத்துடனும் காத்திருக்கிறார்கள். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், படத்தில் நடிப்பதற்காக சூர்யா 2 காளையை தனது வீட்டில் வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.

VaadiVaasal [Image Source : Twitter /@TheVijay68Film]
இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பே வாடிவாசல் படத்தில் இயக்குனரும், நடிகருமான அமீர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவியது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களை சற்று அதிர்ச்சியாக்கியது. ஏனென்றால், ஏற்கனவே அமீர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ராஜன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

vadivasal ameer [Image Source : File Image ]
எனவே, படத்தில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தை விட அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. எனவே, அதே போலவே அமீர் வாடிவாசல் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தால் சூர்யா கதாபாத்திரத்தை விட பெரிதளவில் பேசப்பட்டுவிடுமோ என அதிர்ச்சியானார்கள். இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அமீர் தான் வாடிவாசல் படத்தில் நடிக்கவேண்டும் என்பதில் வெற்றிமாறன் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அமீர் ” வாடிவாசல் படம் குறித்து நேற்று வெற்றிமாறன் கால் செய்து என்னிடம் பேசினார்.

Director Ameer [Image Source : File Image ]
படத்தின் கதை பற்றி என்னிடம் ஒரு 10 நிமிடம் பேசினார். படத்தின் கதை அனைத்தையும் என்னிடம் வெற்றிமாறன் சொல்லவிட்டார். படத்தில் அவர் ஒரு கதாபாத்திரம் எனக்காக வைத்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்கவேண்டும் எனவும் உறுதியாக இருக்கிறார். வெற்றிமாறன் வேலை செய்யும் விதமே வேறுமாதிரி இருக்கும். எதற்காக சொல்கிறேன் என்றால், வெற்றிமாறன் இப்போது விடுதலை 2 படத்தின் வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Director Ameer play vadivasal movie [Image Source : File Image ]
வாடிவாசல் படத்தின் முன் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பிட்ட ஒரு சில இயக்குனர்கள் மட்டும் தான் இப்படி வேலை செய்து நான் பார்த்திருக்கிறேன். வாடிவாசல் படத்திற்கான சிஜி வேலைகள் எல்லாம் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் படம் இந்த வருடம் இறுதியில் ஆரம்பம் ஆகும்” என கூறியுள்ளார். ஏற்கனவே அமீர் நடிக்கவுள்ள தகவலை பார்த்த ரசிகர்களே அதிர்ச்சியில் இருந்த நிலையில், தற்போது அவர் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சில சூர்யா ரசிகர்கள் எது எப்படியோ படம் நல்ல வந்தால் மகிழ்ச்சி தான் எனவும் தெரிவித்து வருகிறார்கள்.
