News
விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!
வெற்றி மாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில், நடிகர் தனுஷ் பாடிய இப்படத்தின் முதல் பாடலான “ஒன்னோட நடந்தா” பாடல் சமீபத்தில் தான் படக்குழு வெளியிடப்பட்டது. இந்த மெல்லிசை பாடல் படத்திற்கான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இந்நிலையில், இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 8-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.
இதையும் படிங்களேன் – ஐஸ்வர்யா ராஜேஷின் “சொப்பன சுந்தரி” டிரைலர் எப்படி இருக்கு?
இதற்கிடையில், இந்த படத்தின் இரண்டு பாகங்களின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்பனையாகி விட்டதால், இப்படம் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெயமோகன் எழுதிய துணைவன் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘விடுதலை’ படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
