Connect with us
nayanthara and vignesh shivan

News

படத்தை பாதியில் விட்ட விக்னேஷ் சிவன்….அன்பு மனைவி நயன்தாராவுக்கு கட்டும் பிரமாண்ட குடியிருப்பு…

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற  திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை அவர் தான் இயக்குவதாக இருந்தது பிறகு சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகினார். பிறகு லவ் டுடே பிரதீப்பை வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார்.

Vignesh Shivan

Vignesh Shivan [Image Source : Instagram/@wikkiofficial]

அந்த படத்திற்கான வேலைகளும் கூட மும்மரமாக நடைபெற்று வந்தது. இது தொடர்பான  புகைப்படங்களும்  சமூகவலைதளங்களில் வைரலானது. ஆனால், அந்த படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வமும் அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கிடையில், புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. அது என்னவென்றால் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்காலிகமாக அந்த திரைப்படத்தை தற்போது இயக்கவில்லையாம்.

wikki and nayan

wikki and nayan [Image Source : Instagram/@wikkiofficial]

ஏனென்றால், தன்னுடைய ஆசை மனைவி நயன்தாரா  கேரளாவில் வாங்கியுள்ள பிளாட்டில் 120க்கும் மேல் கொண்ட வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பை கட்டதிட்டமிட்டுள்ளதால் அதனை கூடவே இருந்து பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற காரணத்தால் அதற்கான முழு பொறுப்பில் தற்போது விக்னேஷ் சிவன் இறங்கியுள்ளாராம்.  பட வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அதில் தான் தற்போது விக்னேஷ் சிவன் கவனம் செலுத்தி வருகிறாராம்.

wikki and nayan

wikki and nayan [Image Source : Instagram/@wikkiofficial]

பல மாடிகள் கொண்ட குடியிருப்பாக கட்டப்படவுள்ளதால் நயன்தாரா செம மாஸ்டர் பிளான் ஒன்றையும்  போட்டுள்ளாராம். அது என்னவென்றால், நயன்தாரா தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து இவ்வளவு பெரிய குடியிருப்பை கட்ட இடம் வாங்கியாச்சு, எனவே அது வளர…வளர தன்னிடம் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை செலவு செய்தால் நன்றாக இருக்காது இனிமேல் நடிக்கும் படங்களில் வரும் சம்பளத்தை அதில் செலவு செய்யலாம் என திட்டமிட்டுள்ளாராம்.

wikki and nayan

wikki and nayan [Image Source : Instagram/@wikkiofficial]

இதையும் படியுங்களேன்- ஐயோ கடவுளே முடியல… இந்தியன் 2 படத்தால் நொந்துபோன இயக்குனர் ஷங்கர்…

மேலும், இதன் காரணமாக மட்டும் தான் நயன்தாரா இரண்டு குழந்தையை தத்தெடுத்தும் கூட அதனை கவனிக்கமுடியலாம் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து வருகிறாராம். குறிப்பாக பாலிவுட், கோலிவுட் என எந்த மொழிகளில் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதனை தவற விடமால் நடித்து வருகிறாராம். இவருடைய நடிப்பில் அறம் படத்தின்  இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது என சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் எப்படியோ குடிருப்பு கட்டி சந்தோசமாக இருந்தால் மகிழ்ச்சி தான் என கூறி வருகிறார்கள்.

Continue Reading
To Top