News
ஒரு வழியாக ‘தமிழரசன்’ படத்துக்கு ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு.!
இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘தமிழரசன்’ திரைப்படம் மார்ச் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நீண்ட நாள் நிலுவைக்கு பின், படம் இறுதியாக திரைக்கு வர இருக்கிறது.
த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பேசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் ரவி, சினு, சோனு சூட், சாயா சிங், சங்கீதா, முனிஷ்காந்த், ரோபோ சங்கர் மற்றும் யோகி பாபு, சுரேஷ் கோபி, ராதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்டது, டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு மனைவியாக ரம்யா நம்பேசன் நடிக்கிறார். தனிப்பட்ட காரணத்தால் விஜய் ஆண்டனி ஒரு மருத்துவமனையில் பிணைக் கைதியாக இருக்கிறார். அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பது தான் படத்தின் கதை. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்களேன்- செம.! பொன்னியின் செல்வனுக்கு விருது.! சிறந்த படம், சிறந்த இசை என 6 பிரிவுகளில் பரிந்துரை…
இதற்கிடையில், விஜய் ஆண்டனி கடைசியாக ‘அக்னி சிறகுகள்’ படத்தில் நடித்திருந்தார். இதுபோக, காக்கி, கொலை, வள்ளி மயில், மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் வைத்துள்ளார். இப்பொது, அவர் பிச்சைக்காரன் 2 படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.
