Connect with us

Movies

மிரட்டும் ரம்யா கிருஷ்ணன்.! எதிரிகளை பந்தாடும் விஜய் தேவரகொண்டா.! ‘லைகர்’ ட்ரைலர் இதோ..,,

மிரட்டும் ரம்யா கிருஷ்ணன்.! எதிரிகளை பந்தாடும் விஜய் தேவரகொண்டா.! ‘லைகர்’ ட்ரைலர் இதோ..,,

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஜய் தேவரகொண்டா தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லைகர்’ என்ற குத்துச்சண்டை படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகர் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இரண்டு நகரங்களில் நடந்தது.

அதன்  ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டேக்கு  அமோக வரவேற்பு கிடைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ட்ரைலர் இன்று காலை 9.30 மணிக்கு படக்குழு வெளியிட்டது.

ட்ரைலரில் முழுக்க முழுக்க குத்துச்சண்டை குறித்த விரிவான காட்சிகள் இடம் பெற்றிந்தாலும் ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு ரசிகர்களின் மிகவும் விரும்பத்தக்க காட்சியாக அமைந்திருக்கிறது.

இதையும் படிங்களேன் – பிரபல மலையாள படத்தில் நடிக்கவிருந்த தனுஷ்.! ஓப்பனாக பேசிய பகத் பாசில்..,,

மேலும், இந்த ட்ரைலரின்  தொடக்கத்தில் ரம்யா கிருஷ்ணனின் ‘ஒரு லயனுக்கும் டைகருக்கும் பிறந்தவன்’ என்ற வசனம் மாஸாக அமைந்துள்ளது. இப்படத்தில், பிரபல குத்துசண்டை வீரரான மைக் டைசன் நடித்துள்ள இப்படம் பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 25 அன்று திரைக்கு வருகிறது.

Continue Reading
To Top