அந்த காரணத்துக்காக மணிரத்னமிடம் கெஞ்சிய விஜய்.! அரசியல்னு வந்துட்டு…கடைசியில் கைகட்டி நின்ற சம்பவம்.!
தளபதி விஜய்யின் ‘தலைவா’ திரைப்படம் வெளியாகும் போது, படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்கள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் என்றும் மறைவதில்லை. அப்படிப்பட்ட இந்த ‘தலைவா’ படத்துக்கு முதலில் ‘தளபதி’ தான் டைட்டிலாக இருந்தது தெரியுமா? அட ஆமாங்க…. இப்படத்தை இயக்கிய இருக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார். தளபதி விஜய் நடிக்கும் இப்படத்திற்கு ‘தளபதி’ என்று பெயரிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், டைட்டிலை மீண்டும் பயன்படுத்த இயக்குனர் மணிரத்னத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
காரணம், தளபதி திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் 1991-ஆம் ஆண்டு வெளிவந்த படமாகும், இப்படத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், அந்த டைட்டிலை பயன்படுத்த இயக்குனர் மணிரத்னத்திடம் ஏ.எல்.விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தை எதுவும் பயனளிக்கவில்லை. வேறு தலைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில், ஏ.எல்.விஜய் படத்திற்கு ‘தலைவா’ என்று பெயரிட்டார்.
பின்னர், ‘தலைவா’ படம் வெளியாவதற்கு முன்பே அரசியல் படமாக கருதப்பட்டு, படத்தில் இடம்பெற்றுள்ள ‘டைம் டு லீட்’ என்ற வசனம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படம் தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டதால் ஆகஸ்ட் 9ஆம் தேதி தமிழகம் தவிர உலகம் முழுவதும் வெளியானது. பின்னர் தளபதி விஜய் இந்த பிரச்சினைகளை தீர்த்த பின்பு, படம் பத்து நாட்கல் கழித்து ஆகஸ்ட் 20 அன்று தமிழ்நாட்டில் வெளியானது. ஆனால் ‘தலைவா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.
தளபதி விஜய் கைகட்டி நின்ற சம்பவம்?
அதாவது, அரசியலை முன் நிறுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டைம் டு லீட்’ என்ற வசனம் மிகப்பெரிய சர்ச்சையை எதிர்கொண்டது. இந்த வசனம் படத்தில் இடம்பெற்று இருந்ததால், அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஆட்சியில் இப்படத்தை வெளியிட தடைவிதித்தனர்.
உடனே, என்ன செய்வதன்று தெரியாமல் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகரும் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்களாம். படத்தை வெளியிட கோரி அப்போது தளபதி கைகட்டி நின்றாதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ கூட அப்போது இணையதளத்தில் வெளியாகி வைரலானதாம். இறுதியாக, பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்து பின், ‘டைம் டு லீட்’ என்ற வசனம் நீக்கப்பட்டு பின் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
