News
தக்காளியை எறிந்த விஜயகாந்த்…கடுப்பான விஜய் தந்தை…வெளியான ரகசிய தகவல்.!!
நடிகர் விஜயகாந்த் பற்றி பல சினிமா பிரபலங்கள் அவ்வப்போது ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டிகளில் விஜயகாந்த்தின் குணம் பற்றியும், அவர் செய்த உதவிகள் பற்றியும் மிகவும் பெருமையாக பேசுவது உண்டு. அப்படி பல நடிகர்கள் பேசி நாம் பார்த்திருப்போம். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்த் தனக்கு வந்த பெரிய படத்தின் வாய்ப்பை தனக்காக விட்டுக் கொடுத்ததாக சரத்குமார் தெரிவித்திருந்தார்.

vijayakanth [Image Source : File Image ]
இந்நிலையில். சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபல ஸ்டாண்ட் இய்குணரான ராக்கி ராஜேஷ் விஜயகாந்த்பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய ராக்கி ராஜேஷ் ” விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர். அவர் படப்பிடிப்பு சமயங்களில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாலே அந்த இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். அவர் மிகவும் கலகப்பான மனிதர்.

rocky rakesh about vijayakanth [Image Source : File Image ]
மார்க்கெட்டில் படப்பிடிப்புகள் இருந்தால் அங்கிருக்கும் தக்காளிகள் மற்றும் வெங்காயத்தை தூக்கி எறிந்து விளையாடுவார். ஒருமுறை விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவருடைய இயக்கத்தில் செந்தூரப்பூவே என்னும் தலைப்பில் படம் பண்ணிக் கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் படப்பிடிப்பின்போது தக்காளியை எறிந்து விஜயகாந்த் விளையாடி கொண்டிருந்தார்.

S. A. Chandrasekhar and vijayakanth [Image Source : File Image ]
இதையும் படியுங்களேன்- வாடிவாசல் படத்தில் நான் தான் நடிக்கணும்னு வெற்றிமாறன் உறுதியா இருக்காரு…சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமீர்…
அந்த சமயம் எதிர்பாராத விதத்தில் ஒரே ஒரு தக்காளி மட்டும் எஸ்ஏ சந்திரசேகர் மீது பட்டுவிட்டது. இதனால் அவர் மிகவும் கடுப்பாகி யார் எறிந்தது..? என்று கத்தினார். உடனடியாக விஜயகாந்த் ‘சார் நான் தான் தெரியாமல் எறிந்துவிட்டேன். அது உங்கள் மீது பட்டுவிட்டது என்று கூறினார். உடனடியாக சந்திரசேகர் என்ன விஜய் சின்னப்புள்ள தனமா விளையாடிக்கொண்டிருக்கிறாய்.? என கேட்டுள்ளார். அதற்கு விஜயகாந்த் சார் சும்மா தாமஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் என செல்லமாக கடிந்துகொண்டாராம்.
