News
சட்டைல தக்காளி சட்னி ஊத்திகிட்டு, கசாப் கத்தியோட வந்ததுக்கு கொண்டாடாதீங்க.! சூர்யாவை விளாசிய ப்ளூ சட்டை….
நடிகை சூர்யா இயக்குனர் லோகேஷ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார் என்றே சொல்லலாம். காரணம், விக்ரம் படம் கமலின் படமாக இருந்தாலும், படத்தில் இறுதியில் வெறும் ஐந்து நிமிடங்களில் வந்து அவரது அசுர நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரை சினிமா ரசிகர்களின் அனைவரது மனதையும் கவர்ந்து விட்டார்.
அன்று முதல் இன்று வரை ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் அனைவரது மனதிலும் இணையதளத்திலும் முதலிடம் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு அவருக்கு அந்த கதாபாத்திரம் மட்டுமல்லாமல், அவர் நடித்த விதமும் தரமாக அமைந்தது. வெறும் ஐந்து நிமிடங்களில் வந்து நடித்ததில் அவரது சினமா மார்க்கெட்டும் இன்னும் அதிகமாகிவிட்டது.
இந்த நிலையில், புதிய திரைப்படங்கள் வெளியானதும், அந்த படங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களும் எதிர்மறை விமர்சனங்களையும் வெளிப்படுத்தும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இப்போது சூர்யா வம்புக்கு இழுத்துள்ளார். அதாவது, சூர்யா ஏற்று நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து மட்டமாக பேசியிருக்கிறார்.
ஒரே ஒரு சீன்ல சட்டைல தக்காளி சட்னி ஊத்திகிட்டு, கசாப்புக்கடை கத்தியோட வந்ததுக்கு எல்லாம்… ரோலக்ஸ் ரோலக்ஸ்னு ஃபயர் விடுறீங்களே… pic.twitter.com/6Ae5fHqldr
— Blue Sattai Maran (@tamiltalkies) June 23, 2023
ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒரே ஒரு சீன்ல… சட்டைல தக்காளி சட்னி ஊத்திகிட்டு, கசாப்புக்கடை கத்தியோட வந்ததுக்கு எல்லாம்… ரோலக்ஸ் ரோலக்ஸ்னு ஃபயர் விடுறீங்களே… என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதற்கு பலரும் பதிலடி கொடுக்கும் வகையில், அந்த கதாபாத்திரத்தை இளைஞர்கள் கொண்டாடுறானுங்க.. உங்களுக்கு என்ன… BP மாத்திரை போட்டோமா வாக்கிங் போனோமான்னு இருக்கனும் என்று பேசி வருகினற்னர்.
சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது, சூர்யா திரையுலக வாழ்க்கையில் மிக பெரிய பட்ஜெட் படமாகும். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சூர்யா ஐந்து அவதாரங்களில் நடித்துள்ளார். இப்படம் 2டி மற்றும் 3டியில் படமாக்கப்பட்டு வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
