Connect with us
Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Cinebloopers | Tamil Cinema News | தமிழ் சினிமா செய்திகள்

Movies

‘விக்ரம்’ படப்பிடிப்பு 100 நாள் OK.! படம் 100 நாள் ஓடுமா.?

நடிகர் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது வரவிருக்கும் படமான ‘விக்ரம்’ படத்திற்கான தனது இறுதி படப்பிடிப்பை முடித்திருந்த நிலையில், இயக்குனர் நேற்று இரவு படத்தின் முழு படப்பிடிப்பையும் முடித்தார்.

லோகேஷ் இதனை உறுதிபடுத்தும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில், 110 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டது எனது படக்குழுவினருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் நடிகர் ஃபகத் பாசில் மற்றும் நரேன் ஆகியோர் கடைசி இருந்தனர், இதில் ஃபகத் பாசில் துப்பாக்கி வைத்து சுடுவதும் லோகேஷ் கனகராஜ் ஆரம்பிக்கலாமா என்று சொல்வதும் இடம் பெற்றுள்ளது.

 

இப்படத்தில், கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும், ஃபகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன்- வேட்டிய கட்டுனா நான்தாண்டா ஜட்ஜ்.! பட்டைய கிளப்பும் ET ட்ரைலர் இதோ.!

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் போன்ற தென்னிந்திய நட்சத்திரங்களின் பட்டாளமே நடித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top