Movies
விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் மிரட்டல் மோஷன் போஸ்டர்.!
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் எஸ்,ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகரான செல்வராகவன் சமீபத்தில் இணைந்தார்.
இதில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், ரிது வர்மா நாயகியாகவும் நடித்துள்ளனர். இது போக, நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, நிழல்கள் ரவி மற்றும் பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். விஷாலின் எதிரி படத்தையும் தயாரித்த வினோத் குமார் மார்க் ஆண்டனிக் படத்தை தயாரிக்கிறார்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, மார்க் ஆண்டனி அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகயுள்ளது. மோஷன் போஸ்டரின் பின்னையில் ஒழிக்கும் பிஜிஎம் வேற லெவலில் இருக்கிறது. சொல்ல போனால் மோஷன் போஸ்ட மிரட்டலாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்களேன் – 95-வது ஆஸ்கர் விருதுக்கு வாக்களித்த சூர்யா.! மாறாக்கு கிடைத்த பெருமிதம்..
இதற்கிடையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்தது, இதில் விஷால் நூலிழையில் உயிர் தப்பினார்.
