Connect with us
GoodNightMovie Review

Movies

மிஸ் பண்ணிட்டோம்…’குட் நைட்’ படத்தை பார்த்துவிட்டு வருத்தப்படும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பொதுவாகவே ஒரு நல்ல திரைப்படங்கள் வெளியானால் அந்த திரைப்படத்தை திரையரங்குகளில் மக்கள் பார்க்காமல் ஓடிடியில் வெளியான பிறகு பார்த்துவிட்டு அய்யய்யோ இந்த திரைப்படத்தை மிஸ் பண்ணிட்டோமே என வருத்தப்படுவதுண்டு. அப்படித்தான் ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான  ‘குட் நைட்’ திரைப்படம் கூட.

GoodNightMovie

GoodNightMovie [Image Source : Twitter /@Sandyy3011]

இந்த படத்தை பலரும்  திரையரங்குகளில் பார்த்து படம் வசூல் ரீதியாக  வெற்றி அடைந்தாலும் ஒரு சிலரும் படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் தவற விட்டு விட்டோம் என வருத்தப்பட்டு வருகிறார்கள். இந்த திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியான நிலையில், படத்தை பாராட்டி வருகின்றனர்.

Good Night Movie

Good Night Movie [Image Source : Twitter /@iamrahulbhushan]

இந்நிலையில், ஓடிடியில் வெளியான குட் நைட் படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.

விமர்சனங்கள் 

படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ” டாடா திரைப்படத்திற்கு பிறகு குட் நைட் திரைப்படம் ஒரு சிறந்த ஃபீல் குட் திரைப்படம்.குட்நைட், முழு மகிழ்ச்சியுடன் ஒரு நல்ல மிடில் கிளாஸ் திரைப்படம். அதிகபட்ச வசனங்களும் காட்சிகளும் புதியவையாக இருந்தது. திரையரங்குகளில் பார்க்காமல் தவறவிட்டுவிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” பல சிரிப்பு தருணங்களுடன் ஒரு நல்ல முதல் பாதி, கண்ணியமான இரண்டாம் பாதி, வரையறுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சுற்றியே கதை நகர்கிறது, மணிகண்டன் & மீத்தா ரகுநாத் நடிப்பு நன்றாக இருந்தது. 2வது பாதி நல்ல நகைச்சுவையுடன் கொஞ்சம் குறைவாக இருக்கலாம் என்று உணர்ந்தேன், ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்” என பதிவிட்டுள்ளார்.

மற்றோருவர் ” குட் நைட் 2ம் பாதியில் கண்டிப்பாக கண்ணீர் வரும்…இந்த திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கிறது. மணிகண்டன் & மீத்தா நடிப்பு பிரமாதமாக இருந்தது” என பதிவிட்டுள்ளர்.

மற்றோருவர் ” ரொம்ப நாள் கழிச்சு தமிழ்ல ஒரு ஃபீல் குட் மூவி. மணிகண்டன் & ரமேஷ் திலக் – இவங்க ரெண்டு பெரும் வர சீன்ஸ்லாம் சூப்பரா இருக்கு. மீத்தா & ரைச்சல் – குட் பெர்பார்மன்ஸ். படத்துல ஒரு ஸ்டீரியோடைப்ப ஓடச்சி பேசிருகாங்க” என பதிவிட்டுள்ளார்.

Continue Reading
To Top