தெறி படத்தில் நடிக்க காரணம் என்ன..? நச் பதில் கொடுத்த சுனைனா…
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகை சுனைனாவும் ஒரு முக்கியமான சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனாலும், அவருடைய கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது என்றே கூறலாம்.

theri sunaina [Image Source : Twitter behindwoods]
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சுனைனாவிடம் தெறி திரைப்படத்தில் எதற்காக நடித்தீர்கள்..? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை சுனைனா ” தெறி திரைப்படத்தின் கதை சற்று அருமையாக இருந்தது. அந்த படத்தின் கதையில் நானும் ஒரு பார்ட்டாக இருக்கவேண்டும் என ஆசை இருந்தது.

sunaina about theri [Image Source : File Image ]
அதையும் தாண்டி விஜய்காக தான் நான் அந்த படத்தில் நடித்தேன். விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவருடைய படங்கள் எல்லாமே வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி அடைகிறது. எனவே அவருடைய படங்களில் நடிக்கவேண்டும் என்பது பல நடிகைகளின் கனவாக இருக்கிறது. இயக்குனரும் பெரிய இயக்குனர்.

sunaina [Image Source : peakpx ]
எனவே, இப்படி பட்ட ஒரு நல்ல படத்தில் நாம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தால் என்ன..? என்று நடிக்க ஒப்புக்கொண்டேன். சினிமா துறையில் ஒரு நடிகையாக இருக்கிறோம் என்றால் எந்த மாதிரி கதைப்பாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை நடிக்க வேண்டும். ஒரு நடிகைக்கு அது தான் கடமை ” என தெறி படத்தில் நடித்ததற்கான காரணத்தை மனம் திறந்து பேசியுள்ளார்.

sunaina [Image Source : filmibeat ]
மேலும், நடிகை சுனைனா தற்போது ரெஜினா எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
