News
இந்தியன் 2 படத்தில் விவேக் காட்சிகள் என்ன ஆகும்? வெளியான சுவாரசியமான தகவல்…
சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். இவர், 2017 -ல் மாரடைப்பால் காலமானார். விவேக்கின் திடீர் மறைவு சினிமா துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இவர் இறப்பதற்கு முன், இவர் நடித்து வந்த பல படங்கள் பாதி முடிவடையாமல் போனது.
பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்த விவேக், கடைசியாக ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வந்தார். ஆனால், ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் அவர் திடீரென மரணமடைந்தார்.
இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தில் விவேக்கின் காட்சிகள் மாற்றப்படுவமா? இல்லைஎன்றால் அவருக்கு பதிலாக வேறொருவர் நடிப்பாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது. இது குறித்து சமீபத்திய தகவலின்படி, படத்தில் அவரது பகுதிகள் நீக்கப்படாது என்று படக்குழு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்களேன் – சோகம்….தனது முதல் படம் வெளியாவதற்கு முன் இளம் இயக்குனர் மரணம்.!
இது விவேக்கின் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்றே சொல்லலாம். ஏனென்றால், மறைந்த விவேக்கின் கடைசி படம் ‘இந்தியன் 2’ என்பதும் அவரை மீண்டும் திரையில் காண இது ஒரு அறிய தருணம். இந்நிலையில், விவேக் நடித்த காட்சிகளுக்கு யார் டப்பிங் பேசுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையில், இப்படத்தில் கிட்டத்தட்ட 6 வில்லன்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில், ‘இந்தியன் 2’ கமல்ஹாசன் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
