Movies
லியோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போ..? மனம் திறந்த தயாரிப்பாளர்.!
நடிகர் விஜய் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

leo vijay movie [Image Source: Twitter]
இந்த திரைபடத்தில் விஜய்யுடன் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

LEO VIJAY [Image Source: Twitter]
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. விரைவில் இந்த திரைப்படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளது.

Thalapathy 67 LEO [Image Source: Twitter]
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “லியோ படத்தின் அடுத்த அப்டேட், விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்படும்” என்று கூறினார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் முதல் பாடல் அந்த தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
