Movies
கவின் நடித்த ‘டாடா’ படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது.?
நடிகர் கவின் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதன் மூலம் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தற்போது, இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கிய அப்பா சென்டிமென்ட் படமான ‘டாடா’ திரிபடத்தில் நடித்தார். மேலும், இந்த திரைப்படம் சிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, சூப்பர்ஹிட் என்று தயாரிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இப்படம் OTT வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது, ஒரு அதிக விலையை கொடுத்து பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா மார்ச் 10 ஆம் தேதி திரையிடப்பட உள்ளது.
டாடா திரைப்படம் பல சினிமா நட்சத்திரங்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது, நேற்று கூட நடிகர் கார்த்தி கவினை பாராட்டினார். கணேஷ் கே பாபு இயக்கிய, ‘டாடா’ திரைப்படத்தில், நடிகர் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்களேன் – சிம்வுவின் 48வது படம்.! இயக்குனர் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்….
தந்தை மற்றும் மகன் உணர்வை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த உணர்ச்சிகரமான டாடா திரைப்படம் கவினுக்கு ஒரு சிறந்த வழியே ஏற்படுத்தி காட்டியுள்ளது என்று சொல்லப்படுகிறது. மேலும், இப்படம் 12 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் படமாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
