News
தோட்டா காயங்களுடன் தப்பி ஓடிய புஷ்பா.! படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்…
‘புஷ்பா 2’ படத்தின் முக்கிய அறிவிப்பு ஏப்ரல் 7-ம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகிறது என் படக்குழு அறிவிப்பு.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை இந்த திரைப்படம் பெற்றது என்றே கூறலாம். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது.
முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதால் படக்குழு ஒவ்வொரு காட்சிகளையும் பார்த்து பார்த்து எடுத்து வருகிறார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களுமே புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
ரசிகர்களுக்கு இன்று குஷிப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு சிறிய வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், திருப்பதி சிறையில் இருந்து காயங்களுடன் புஷ்பா தப்பியதாக ஒரு செய்தி தலைப்புடன் காட்சி தொடங்குகிறது. புஷ்பாவுக்கு என்ன ஆனது? புஷ்பா எங்கே? என பல கேள்விகளை தயாரிப்பாளர்கள் எழுப்பியுள்ளனர் காவல்துறைக்கு எதிரான கலவரம், குழப்பம் அனைத்திற்கும் ஏப்ரல் 7ஆம் தேதி விடை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WhereIsPushpa ? (Tamil)
The search ends soon!The HUNT before the RULE ????
Reveal on April 7th at 4.05 PM ????#PushpaTheRule ❤️???? pic.twitter.com/t7GzeoTsyY— Mythri Movie Makers (@MythriOfficial) April 5, 2023
அதாவது, இதன் முழு வீடியோவும் வருகிற 7-ஆம் தேதி மாலை 4.05 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அப்டேட் வருகின்ற 8-ம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால், அதற்கு முன்தினம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
