News
உங்களை யார் சொல்ல சொன்னா..? டென்ஷன் ஆன வெங்கட் பிரபு…உதவியாளர்களுக்கு போட்ட முக்கிய கண்டிஷன்…
இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் விஜயின் 68 திரைப்படத்தை இயக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக இருப்பதால் தளபதி 68 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும் அதில் ஜோதிகா நடிக்க வைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் தகவல்கள் தீயாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவியது.

Thalapathy68 [Image Source : Twitter /@TheVijay68Film]
இந்நிலையில், இந்த தகவலால் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு மிகவும் கடுப்பில் இருக்கிறாராம். முதலில் இந்த படத்தில் ஜோதிகாவை வைத்து நடிக்க வைக்கலாம் என்று வெங்கட் பிரபு தனது உதவியாளர்களிடம் பேசி முடிவெடுத்தாராம். பிறகு, ஜோதிகா நடிக்கும் விஷயம் வெளியே தெரிந்தவுடன் உதவியாளர்கள் அனைவரையும் அழைத்து உங்களை யாரு இந்த விஷயத்தை வெளியே சொல்ல சொன்னா.? என்று கடுப்பாகி விட்டாராம்.

venkat prabhu angry [Image Source : File Image ]
பிறகு கடைசியில் ஒரு முடிவு எடுத்தாராம். அது என்னவென்றால், அந்த 6 உதவியாளர்கள் அனைவரையும் அழைத்து நீங்க யாருன்னு வீட்டுக்கு போக கூடாது என்றும் நீங்கள் இங்கே தான் தங்கி இந்த பேச்சுவார்த்தை முடிகிற வரை இங்க தான் இருக்க வேண்டும் என்றும் உங்களுக்கு தேவையான அனைத்தும் இங்கு கிடைக்கும் இங்க தான் இருக்கும் என கண்டிஷன் போட்டுள்ளாராம்.

venkat prabhu [Image Source : File Image ]
மேலும், இதற்கான பேச்சுவார்த்தை நடத்த முடிந்த பிறகு தான் நீங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளாராம் .உதவியாளர்களைப் போலவே வெங்கட் பிரபுவும் வெளியே செல்லாமல் இருக்கிறாராம் ஏனென்றால், வெங்கட் பிரபு மிகவும் ஜாலியான மனிதர் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக அப்டேட்டுகளை கூறிவிடுவார்.

venkat prabhu [Image Source : File Image ]
எனவே படம் ஆரம்பிக்கும் வரை எந்த ஒரு விஷயமும் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக தானும் வெளியே போய் எதுவும் சொல்லக்கூடாது என்று மிகவும் தெளிவாக இருக்கிறாராம். மேலும் தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
