Celebrities
குக் வித் கோமாளியில் இருந்து விலகியது ஏன்..? மணிமேகலை கூறிய பதில் …!
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். ஆனால் எந்த காரணத்துக்காக அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்று எந்த ஒரு தகவலையும் கூறவில்லை.

Manimegalai cwc cry [Image Source: Twitter]
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியதற்கான காரணம் என்ன என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த மணிமேகலை “நான் குக் வித் கோமாளியை மிஸ் பண்ணுகிறேன்” என தெரிவித்தார்.

Manimegalai [Image Source: Twitter]
இதையும் படியுங்களேன்- இன்னும் 2 வாரம் தான்…”மாவீரன்” திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் இதோ.!
ஆனால் என்ன காரணம் என்று குறித்து கேட்டதற்கு அவர் பேசவே இல்லை. அவரை தொடர்ந்து இதேபோல், பழையசோக் தங்கதுரை பேசும்போது, “மணிமேகலை குக் ஆவதற்காக முயற்சி செய்கிறார். ஆகவே அடுத்த 5வது சீசனில் குக்காக வருவார்” என கூறினார்.

Manimegalai [Image Source: Twitter]
இதனை பார்த்த அங்கிருந்த ரசிகர்கள் சூப்பர் சூப்பர் என கத்தினார்கள். எனவே அடுத்த சீசன் அவர் ஷிவங்கியை போல சமையலை கற்றுக்கொண்டு அடுத்த சீசன் குக் -ஆக வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
